நேரிசை வெண்பாக்கள்
கொண்டல் முழவதிரக் கூவும் குயிலோயத்
தெண்டிரை வாய்க்கால் தெளிவுறவே - கொண்டாட்டம்
கூடிவரும் இன்பமோ கோடிபெறும் வான்மழையால்
ஆடிடும்சி கண்டி அழகு .
கொண்டல் முழவதிரக் கூவும் குயிலோயத்
தெண்டிரை வாய்க்கால் தெளிவுறவே - விண்ணமுது .
பால்வார்க்க வாடும் பயிர்களும் பூரித்துச்
சூல்கொள்ளும் மண்ணில் துளிர்த்து .
கொண்டல் முழவதிரக் கூவும் குயிலோயத்
தெண்டிரை வாய்க்கால் தெளிவுறவே - கண்பார்த்த
வானவில்லோ சொக்கிட வைக்கும், பொழிந்திடும்
தேனமுதோ விண்ணகத்தின் சீர் .
( முகநூலில் குருநாதன் ரமணி ஐயா அவர்கள் தந்த முதல் இரு அடிகளைக் கொண்டு அமைந்த வெண்பாக்கள் )