நிலவே முகம் காட்டு

..."" நிலவே முகம் காட்டு ""...
ஒளிபற்றி மிளியவாறே
சூரியனை தொடர்ந்துன்
மெளனமான வருகை
வெண் புன்னகையோடு ,,,,
ஒன்றுமே அறியாதந்த
கடலும் நினைத்தது
ஒப்பனைக்காய் அதனை
பார்க்கிறாய் நீ என்றே ,,,,
ரசிக்கும் எனக்கல்லவா
தெரியும் கடலுக்கும் ஒரு
பொட்டுவைத்து அழகாய்
நீ அலங்கரித்தாய் என்று ,,,,
வெண்மேகம் துயில்கிற
வானமதை பார்த்தேதான்
நானுமிங்கே நடக்கிறேன்
கூடவே நீ வருவதனால் ,,,,
பிரகாசிக்கின்ற பகலிலும்
இப்பிரபஞ்சம் முழுவதுமே
உந்தன் மஞ்சத்தை தேடியே
ஆவலால் அலைகின்றார் ,,,,
முற்றத்திலே காத்திருக்க
முத்தாகவே வேர்த்திருக்க
முன்னிரவின் தேவதையே
முகம் காட்டு என்னிலவே ,,,,
உனக்காகவே இன்றும் நான் ,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
