இருளும்-ஒளியும்

இறைவன் படைப்பில்
ஒளியும் இருளும் இரட்டையர்கள்
கருத்த இருளாம் தமக்கைக்கு
வெண்ணிற ஒளியாம் தம்பி
ஒளி தேடி அலையும் இருளா
இருள் தேடி அலையும் ஒளியா
ஒளி இல்லை எனில் உயிர் இல்லை
ஒளியே இருந்து இருள் இல்லை எனில்
உலகம் உறங்குவது எப்போது
இருளிலும் சுகம் பல உண்டு,
இருளில் சில நீதிகள் மறைந்தாலும் !
இதை நினைத்தே இறைவன்
இணை பிரியா இரட்டையராய்
ஒளி-இருளை படைத்தானோ !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Oct-16, 6:57 am)
பார்வை : 196

மேலே