பூத்தாள் என்னவள்

வசந்தக்கால பறவையே என்
அருகில் வா...
என் நெஞ்சில் ஒரு கூடு கட்டி
வாழ வா...

பூங்குயில் கூட்டமே பாடி வா
என் நெஞ்சிக்கொரு
இனிய கீதம் தேடி வா...

தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
உன் முகவரியை எனக்கு சொல்லு
நான் சிறகடித்து வானில் பறக்க நீ
எனை ஏந்தி செல்லு...

காலங்களே சற்று மிதமாக போங்கள்....
நான் அனுபவித்து
உல்லாசமாய்
வாழ வாழ்த்தொன்று
கூறுங்கள்...

மலர்களே மலர்களே நீங்கள்
மலர்வதை நிருத்துங்கள்
இன்று நான் மலரந்துள்ளேன்
என்பதை உலகுக்கு சொல்லுங்கள்...

பெண்மையை மலரச்செய்த
இறைவா அதன் உண்மையை
சொல்லு...
பெண்ணாக மலர்ந்த நான்
வாழ நீ துணையாக நில்லு..

எழுதியவர் : செல்வமுத்து.M (6-Oct-16, 10:43 pm)
பார்வை : 106

மேலே