சில்க் விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

பட்டுப்போல் மின்னுகின்ற சில்க்விநாய கன்தனை
சட்டென பாதங்கள் பற்றினோர்க்கு - மட்டின்றி
நல்லருளும், நற்பொருளும் நல்கிடுவாய்! உன்னையன்றி
இல்லைகதி வேறே எனக்கு! 1

பட்டாய் மினுமினுக்கும் சில்க்விநாய கன்தாளை
சட்டெனப் பற்றினோர்க்கு சாதகமாய் - மட்டின்றி
நல்லருளும், நற்பொருளும் நல்கிடுவாய் நாயகனே!
எல்லாமும் நீதான் எமக்கு! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Oct-16, 7:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

மேலே