நீ வந்தால்
வானவில்லே
நீ வந்தால்
வானம் கூட
வரையறுத்து கொள்ளும் தன்னை ....
மழைத்துளியே
நீ வந்தால்
கடல் கூட
சுருக்கி கொள்ளும் தன்னை ...
சூரியனே
நீ வந்தால்
கார் காலம் கூட
ஒற்றை பனித்துளியாகும் ....
வெண்மதியாய்
நீ வந்தால்
இரவு கூட
இனித்து போகும் ....
கண்மணியே
நீ வந்தால்
வறுமை கூட
வசந்தமாய் போகும் ....