காதல் சொல்ல துடிக்குது மனசு 555

என்னுயிரே...

உன் கூந்தல் பூக்கள் தூசாகுமென்று
நிலவில் பூ வளர்ப்பேன்...

உன் விழிகளில்
மை இல்லை என்றால்...

என்னை எரித்து
மையாக்கவும் துணிவேன்...

விண்ணை தொட்டு விண்மீன்
பறித்து மூக்குத்தி தருவேன்...

வானவில்லில் நூல் எடுத்து
உனக்கு சேலை கொடுப்பேன்...

வானம் தொட்ட மழைநார் எடுத்து
உனக்கு நட்சத்திர பூமாலை கொடுப்பேன்...

இப்படி எல்லாம் சொல்லி உன்னை
ஏமாற்ற தெரியாதடி எனக்கு...

என் தாய்மீது வைத்த
அன்பும் மரியாதையும்...

உனக்கு என்னால் முழுவதும்
கொடுக்க முடியும்...

என் தாயைப்போல
என்னை அரவணைத்தால்...

என் உயிரையும்
கொடுப்பேன் உனக்காக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (9-Oct-16, 7:32 pm)
பார்வை : 484

மேலே