உங்ககிட்ட உற்சாகம் இருக்கா இல்லையா
நம்ம மைன்ட் ஒரு மெசின் மாதிரி. எப்பவுமே ஆன்லைன்லயே இருந்து நம்மள சுத்தியடிக்கிற கண்ணுக்கு தெரியாத மெசின் தான் அது.
படிச்சவன் படிக்காதவன் ஏழை பணக்காரன் -ன்னு எல்லார் மைன்ட்லயும் எண்ண ஓட்டம், அது என்னமாதிரியான ஓட்டம். அதை கண்ட்ரோல் பண்றதும் கரெக்ட் பண்றதும் தான் நம்ம பாடு, திண்டாட்டம்.
கவுன்சிலிங்-கிற பேர்ல நாம யாரிடமும் போகாம நம்மளே அத சரி செய்ய முடியிற பக்குவம் நமக்கு எப்போ வருதோ அப்ப நம்ம மெச்சூர்டு ஆயிட்டோம்னு அர்த்தம்.
நம்ம மைன்ட் ஒரு கார் மாதிரி நம்மள டிரைவ் பண்ணும். வாழ்க்கை எப்பவுமே ஈஸியா இருந்துடுதா? வேற யாருக்கும் தெரியாது திடீருன்னு மலையேற வச்சிடும், இல்லைனா மலையிலிருந்து இறக்கும் அப்ப சறுக்கும்.
நம்மள நாமே கண்ட்ரோல் பண்ணலைன்னா எங்கேயாவது நம்மள காணாம அடிச்சுடும்.
என்டேர்டைன்மென்ட் தான் நம்ம மனசுங்குற - மெசின்கிற - கார்ன்கிற மதர்போர்ட பேலன்ஸ் பண்ற லூப்ரிகன்ட். அது எவ்வளவு அப்பப்ப தேவையோ அதை நாம தான் தேடிக்கணும்.
அது சரியா கிடச்சு நாம ஒழுங்கா பிரச்சனையில மாட்டிக்காம சோர்ந்து போகாம எப்பவும் குஷியா இருந்துட்டா போதும் அது தாங்க....
ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை.
எவ்வளவு படிச்சிருந்தாலும் எவ்வளவு பணமிருந்தாலும்
எவ்வளவு பிஷியா இருந்தாலும்கூட ஒவ்வொரு நாளும் தூங்கப்போகும் போது நம்ம மனசு நம்மள டிஷ்டர்ப் பண்ணாம நல்லா அளவா தூங்கி டக்குன்னு மறுநாள் எந்திருச்சுட்டோம்னு வச்சுக்குங்க, அது தாங்க இனிமையான நாள்.
வாழ்க்கை டைரியில தினமும் குறிச்சு வையுங்க இன்னிக்கு எப்படி இருந்துச்சுன்னு.
எத்தன மோசமான நாள் நம்மள்ள எத்தனை பேருக்கு இருக்குதோ அவங்கள்ளாம் யோசிச்சு பாருங்க.
மனச நாம கண்ட்ரோல் பண்ணாம அதுக்கு தேவையான லூப்ரிகன்ட்ட ஊத்தாம நம்மள நாமளே ஏமாத்திக்கிட்டு
என்னங்க வாழ்க்கை இது,?
நாம யாருக்காக வாழறோம்? எதுக்காக வாழறோம்?
நிஜமா வாழறோமா இல்ல நடைபிணமா வாழறோமா?
கேட்டுப்பாருங்களேன்,ப்ளீஸ்.!