மௌனம்

அழகிய புன்னகைக்கரங்களில் சிக்கிக்கொண்ட..,
உன் புன்முறுவல்கள்..,
புதைந்துபோனது எதனாலோ..?
விழியோரப் பார்வையில் பதிந்துவிட்ட..,
உன் நினைவுகள்..,
தொலைந்துபோனது எதனாலோ..?
யுகங்களும் நிமிடமாய் தோன்றிவிடும்..,
உன் மகிழ்வுகள்..,
மறைந்து போனது எதனாலோ..?
சந்திக்கும் நேரங்களின் கணப்பொழுதை விட..,
சிந்திக்கும் சிலமணித்துளி அதிகம்தான்..!
என்றாலும் பதில் இல்லை..,
உன் 'மௌனம்' ஒன்றைத் தவிர..!

எழுதியவர் : சரண்யா (10-Oct-16, 12:05 pm)
பார்வை : 381

மேலே