காலம்-நேரம்-முடிவு
காலம் வந்தது
வான் வந்தது
பிரபஞ்சம் வந்தது
விண்மீன்கள் வந்தன
சுழல ஆரம்பித்தன
பம்பரங்கள் போலே
கோள்கள் உருவானது
சுழலும் காலத்தை
கட்டி பிடிக்க
நேரம் வந்தது
நொடி,மணி
நாள்,வாரம்
மாதம், ஆண்டு
என்று
காலம் அந்த
பம்பரம்போல் சுழன்று
கொண்டே இருக்கின்றது
நேரம் அதை அணைத்து
நிறுத்த பார்கிறதோ
இது என்று நடக்குமோ
அன்று சிவனார்
ருத்ர தாண்டவம்
பிரபஞ்சம் மாயமாய்
மறையும்
விண்மீன்கள்,கோள்கள்
மற்றும் எல்லாம்
விழுங்கப் பட்டு
விஞ்சுவது
வெறும் சூனியம்
மீண்டும் பிரபஞ்சம் ...............?
யாரறிவார் .................?