வாடகை வாழ்க்கை
சொந்த வீட்டில் வாழும் மனிதா ?
இந்த பூமி உனக்கு சொந்தமானதா?
வாடகை வீட்டில் வாழும் என்னை
அவமானப்படுத்தாதே...தோழா!
வாழ்க்கை என்பது வாடகைதான்...
கொஞ்ச நாட்கள் இங்கு தங்கி வாழ்ந்துவிட்டு
போகும் காலம் வந்தால் போக வேண்டியதுதான்
அதை அறியாமல் சொந்தம் கொண்டாடாதே!
தவணை முடிந்து போகும் போது
எதையும் கொண்டு செல்ல முடியாது!