யாதும் கவி

தாயணு கோட்டை
தாக்கி
தலை கொண்டு
கருமொழியாய்
தமிழ் கண்டு
தரை வீழும்
ஒவ்வொரு முளையமும்
ஒருவகையில்
தனித்தனி கலைஞர்தான்

முதல் பிள்ளைக்கு
மூடி முலையூட்டும்
முன் ஆசன
பெண்ணில்
காம்பையும் கருவளையத்தையும்
மட்டும் பார்த்து
காமுறுபவன்
தனக்குள்
இரகசிய கவிஞன் ஆகிறான்.

தாய்மையையும் தூய்மையையும்
மட்டும் கண்டு
பேனையால் மொழி பெயர்ப்பவன்
பிறர் போற்றும்
பண்டிதக் கவிஞன் ஆகிறான்.

எழுதியவர் : ச.மு.இன்ஸிமாமுல் ஹக் (11-Oct-16, 5:08 pm)
Tanglish : yaadhum kavi
பார்வை : 798

மேலே