முயன்றால்

பொன்னான காலமது
புரியாத வினாப்பத்திரமாகி
தோல்வியை விடையாய்
கொடுத்தது.....

முயலும் ஆமையின்
கதையின் அர்த்தம்
புரிந்தது
அனுபவம் தந்த
பாடத்தாலே...

வெற்றி பெற்ற
ஆமையின் ஏளனச்
சிரிப்பு வேதனையின்
வலியை கொஞ்சம்
சொல்லியது....

கனவு காணா
கண்களும் கண்ணீர்
பூக்களை பாக்களால்
அள்ளி வீசியது...

நம்பிக்கை எனும்
கேடயம் பற்றி
முயற்சிப் பணி வேகமாய்
அடியெடுத்தது..


கிட்டியது வெற்றி
என்பதா?..
மாபெரும் சாதனை
என்பதா?...

முயன்றால் முடியாமல்
போவதெது....
தோற்று போகாமல்
சாதிக்க முடிவதேது...

எழுதியவர் : பச்சைபனிமலர் (11-Oct-16, 5:05 pm)
Tanglish : muyandral
பார்வை : 62

மேலே