பால விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

பால விநாயகனைப் பாடிப் பரவிடவே
காலமெலாம் நம்வினைகள் காற்றோடு - ஞாலத்தில்
சொல்லாமல் ஓடிவிடும் என்றேநான் சொல்லுவேன்;
எல்லோரும் பாலனையே பாடு! 1
பாடிப் பரவிடவே பால விநாயகன்
தேடியே வந்தருள் தந்திடுவான் - ஓடிடும்
துன்பம் தொலைதூரம்; தூய அவன்புகழை
என்றும் இயம்பு களித்து! 2