முதல் ராகம்
நெஞ்சைத் தொடும்
மென்மையின் ராகம்
பூரிப்பில்இதயம் பூவாகும் நேரம்
அதுஒரு வியப்புக்குரிய வினாடி
தில்லா/ திகிலா/ திகைப்பா/
சொல்லத் தெரியவில்லை,
அந்த நிமிடம் / ஆச்சரியமா /
மனிதன் வாழ்வில் முதன்முதல்
மயங்கும் மானசீகமான தாக்கம்
மனித வாழ்வின் புனிதமான
எண்ணம் மலரும்அந்த நிமிடம்
மீண்டும் வராத அந்த நிமிடம்
மனம் இனிக்க மீட்டிடும் அந்த நேரம்
அற்புத ராகம் இந்த அபூர்வ ராகம் மட்டுமே,
பசுமையின் நெஞ்சத்தில்
பசுமரத்தாணி போல்
பதிந்து நிற்கிறதே
என்னவென்று சொல்வது
எல்லோர் நெஞ்சத்திலும்
ஊற்றெடுக்கும் இந்த மவுன ராகம்
தருவது தனி சுகமே
இது ஒரு புனித ராகமே