தேடலை தேடின பயனம்

பாசத் தேடல்:


கண்விழத்த நாளிளேயே தொடங்கும் - தாய்கான
சிசுவின் முதல் தேடல்

கன்றிற்கு பாலோடு பாசத்தையும் - சுரந்த
பசுவின் பாசத் தேடல்



கலைத் தேடல்:

கல்லில் சிற்பந் தேடும்;
உழியின் கலைத் தேடல்.

வர்ணத்தில் ஓவியங் காணும்;
தூரிகையின் கற்பனைத் தேடல்.

இயற்கையின் எழில் பாடும்;
கவிதையின் காவியத் தேடல்

சிறுதுளையில் கீதம் கசிக்கும்;
மூங்கிலின் இன்இசை தேடல்.



இயற்கைத் தேடல்:

தன்னுல்முனங்கி பூதேடும் – சிறு
வண்டின் ரீங்கரத் தேடல்

வான்தொட சிறகடிக்கும் - ஒரு
தேன்சிட்டின் ஆனந்த தேடல்

மண்தொட்டு வழப்படுத்த - மழைத்
துளியின் ஆசைத் தேடல்

விதையிலிருந்து விண்காண – ஆல
மரத்தின் பெருந் தேடல்

விடியலுக்கு பார்த்திருக்கம் - விண்
மினின் ஓய்விற்கான தேடல்

அம்மாவாசைக்கு காத்திருக்கும் - வெண்
நிலவின் விடுமுறைக்கான தேடல்

சமுத்திரராஜனை அடைய - நதி
ரதியின் பயனத் தேடல்




மனிதத் தேடல்:


பள்ளியில் – அறிவுத்தேடல்
கல்லூரியில் – அனுபவத்தேடல்
அதற்குப்பின் – பொருட்தேடல்


முதலாம் உறவாய் தேர்ந்தேடுக்க
நமக்கான, நட்பின் தேடல்

இரண்டாம் தாயாய் தாங்கிக்கொள்ள
பருவத்தே, வரன் தேடல்

கண்ணுள் ஊடுருவி இதயம்பேச
இளமையின், காதல் தேடல்

பார்த்தாலே கள்ளூர மனதுக்குள்ளே
மோகமுள்ளேற, காமத் தேடல்

முதுமையிலே பாரம் இறக்க
ஆன்மீக, இறைத் தேடல்




என் தேடல்:



கவிதை! அன்றொரு நாள் விளையாட்டாய் எழதினேன்!
இன்றும் விடை தேடி எழதிக் கொண்டிருக்கிரேன்!


ஆம், இயற்கையின் விந்தைகளுக்கு விஞ்ஞானத்தில் விடை தேடும் மனிதனை போல , நானும் தேடினேன் என் கவிதையில்...


விடை கிடைக்கும் தருனம் என் மரணமாகக்கூட இருக்கலாம்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அன்றும் என் கேள்வியை மறந்து விடை தேடுக்கொண்டுருப்பேன்.

எழுதியவர் : கண்ணன் குமார் (12-Oct-16, 12:36 pm)
பார்வை : 188

மேலே