காதலை தேடி-24

காதலை தேடி-24
உன் நெற்றியில் இட்ட
திலகமும் உன்
நெஞ்சத்தில் இணைந்த
திருமாங்கல்யமும்
நித்தமும் கதை படிக்கும்
என் உயிர் நீயென!!!!

உன் விரல் நுனி
துணை போதுமென்று
தவம் கிடக்கிறேன்
என் இல்வாழ்க்கை இனிக்க....

விளையாட்டென்று கண் சிமிட்டு
நகைக்கிறாய் ஒளிந்து கொண்டு
உன்னை காணாமல்
நான் திணறிய நிமிடங்களை....
நீ தான் என் ஆதியும் அந்தமும்
என்பதை அறிந்து கொள்ளாமலே.....


"மிஸ்டர்.சாரதி உங்க டீல் எங்களுக்கு பிடிச்சிருக்கு, இந்த ப்ராஜெக்ட் பெரிய அளவுல சக்சஸ் ஆகும்னு எங்க எல்லாருக்குமே தோணுது, நிச்சயமா இந்த டீல எங்க கம்பெனி ஏத்துக்கும், சோ நீங்க கவலைப்படாம அடுத்த ப்ராஸஸ பாக்க ஆரம்பிக்கலாம்...."

"தேங்க்ஸ் சார், நிச்சயமா நீங்க எதிர்பாக்கற சக்சஸ நாங்க தருவோம்,சோ நம்பிக்கையோட இந்த டீல்ல நீங்க சைன் பண்ணலாம்"

"ம்ம், உங்க துடிப்பான செயலும், ஆர்வமும் தான் எங்களுக்கு இந்த டீல் மேல நம்பிக்கையை உண்டாக்குது சாரதி, உங்க திறமை மேல எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கு.....ஓகே, சாரதி, நம்ப டீல் முடிஞ்சத செலெப்ரெட் பண்ண வேண்டிய நேரம் இது...இன்னைக்கு நைட் பார்ட்டி ஹால்ல செலப்ரேஷன் அரேன்ஜ் பண்ண போறோம், நீங்க நிச்சயம் கலந்துக்கணும்"

“கண்டிப்பா கலந்துக்கறேன் சார், இது உங்களுக்கு மட்டும் இல்லை எனக்கும் கூட செலிப்ரேஷன் டைம் தான்.....”

"ஹலோ அப்பா, நான் சாரதி பேசறேன், டீல் நல்லபடியா முடிஞ்சது, சோ எப்படியும் நாளைக்குள்ள நான் கிளம்பிடுவேன்னு நினைக்கிறேன், மீதி டீடைல் எல்லாம் அங்க வந்துட்டு சொல்றேன்பா,அம்மாகிட்டயும் சகிகிட்டயும் சொல்லிடுங்க"

"சரிப்பா, ரொம்ப சந்தோசம், நீ பத்திரமா வீடு வந்து சேர்ற வரைக்கும் உங்க அம்மாவோட கவலை தீராது, அதனால எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வந்துடுப்பா"

"அப்பா, நான் பத்து நாள்னு சொல்லிட்டு ஒரு வாரத்துலயே வேலைய முடிச்சிட்டு வர காரணமே அம்மா தானே, அம்மாவுக்கு எப்பவும் நான் சின்ன குழந்தை தான், அதனால தான் நான் வெளிநாட்டு வேலை எல்லாம் அதிகமா ஒத்துகிறது இல்லை, ஆனா இந்த தடவ இது என்னோட கேரியரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவப்போற வாய்ப்பு, இத விட்டுத்தள்ள மனசு வரலப்பா, அதான் சார் சொன்னதும் பிளைட் பிடிச்சி கிளம்பு வேண்டியதா போச்சு"

”சாரதி, இதெல்லாம் நீ எனக்கு விளக்கிட்டு இருக்கணுமா, எனக்கு என் பையன பத்தி தெரியாதா, நீ உன் வேலையெல்லாம் முடிச்சிட்டு நல்ல படியா வாப்பா அது போதும்....சரிப்பா, நான் வைக்கறேன், முடிஞ்சா கிளம்பரத்துக்கு முன்னாடி போன் பண்ணுப்பா"
இன்னும் கிட்டத்தட்ட ஒரே நாள் தான் இடையில் இருப்பது, அந்த நாளையும் கடந்து விட்டால் என் காதல் சகியிடம் என் காதலை படிப்பிக்க நான் பறந்து போய்விடுவேன்...
என்னை பார்த்ததும் சகியின் முகம் எப்படி அவள் காதலை, சந்தோஷத்தை வெளிப்படுத்தும்!! அவளோட அந்த அழகிய உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளை பார்க்கவே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் இங்கிருந்து ஓடிவிட வேண்டும்....
ஆசைகளும், கனவுகளும் நினைக்கும்போதெல்லாம் நிறைவேறிவிட்டால் கடவுளையே மறந்து விடுவோம் அல்லவா....அதனால் தானோ என்னவோ நாம் நினைக்கும் எண்ணமெல்லாம் பொய்த்து போக செய்வதிலேயே இறைவன் குறியாய் இருக்கிறான்......
என் கடந்த கால கனவுகளை கலைக்கவென ரூம் சர்வர் கையில் காபியை ஏந்தி கொண்டு அறைக்கதவை தட்ட, நிகழ் காலத்திற்குள் சுழல ஆரம்பித்தேன்....

"சார், காபி எடுத்துட்டு வந்துருக்கேன்.."

"ம்ம்ம்....உள்ள வாங்க"
"இந்தாங்க சார், வேற எதாவது வேணுமா சார்"
"ம்ம்..என்னோட சகி"
"சார்???, என்னவோ கேட்டிங்க, ஆனா எனக்கு புரியல"
"ஓஹ், சாரி, நான் வேற எதோ நினைப்புல எதையோ சொல்லிட்டேன், இப்போதைக்கு ஒன்னும் வேண்டாம், தேவைப்பட்டா உங்களை கூப்பிடறேன், தேங்க்ஸ் பார் யுவர் கேர்"
என் நினைவும், நிஜமும், நிழலும் கூட சகி மட்டும் தானே, அவளை தாண்டி எனக்கு வேறு என்ன தேவை பட போகிறது.... பட்டும், பகட்டும் தேடியா அலைந்து கொண்டிருக்கிறேன், என்னோட சகி, அவளை பார்க்க தானே என் உயிரை கூட உடலில் பிடித்து வைத்து கொண்டு இப்படி நாயாய் பேயாய் அலைந்து திரிகிறேன்.....
அவளை வேண்டாமென ஒருநாளும் நினைத்ததில்லையே, வெறுத்து ஒதுக்கி வைக்க நினைத்தா விலகி ஓடி வந்தேன், அவள் மேல் வைத்த அளவு கடந்த காதல் மட்டும் தானே என்னை அவளிடமிருந்தே ஓட வைத்தது..நான் செய்தது தவறோ, அவளை விட்டு பிரிந்து வந்திருக்க கூடாதோ, எத்தனை பெரிய கஷ்டம் வந்தாலும் அவளோடு இருந்து சமாளித்திருக்க வேண்டுமோ....
மனம் ஒரு பக்கமாக வம்பிழுக்க மறு பக்கம் எனக்கு சாதகமான நியாயங்களை நானே சிந்திக்க ஆரம்பித்தேன்.....

நான் தான் அவள் எதிர்கால வாழ்க்கையின் பிரச்சனையாக இருந்தவன், நானே எப்படி அவளோடு இருந்து அவள் வாழ்க்கையை கேள்வி குறியாக்க நினைப்பேன், நான் விலகி வந்ததால் நிச்சயமாக இந்நேரம் அவள் வேறொரு வாழ்க்கையை அமைத்து கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பாள்….
ஆம்…….. வேறொரு வாழ்க்கை, அவள் வாழ்க்கையில் வேறொருவன்....அவள் வேறொருவரின் மனைவி, வேறொருவரின் குழந்தைக்கு தாய்.....

இதையெல்லாம் நினைக்கும்போதே எதோ மனதை கசக்கி பிழிவதை போல வலிக்கிறதே, வேறொருவரின் திலகத்திற்கும், தாலிக்கும் உரியவளாக நிற்கும் என் சகியை எப்படி என் கண்ணால் பார்க்க போகிறேன்.... இல்லையில்லை, அவள் எப்போதும் என் சகி தான், என் சகி மட்டும் தான், எனக்கு மட்டுமே உரியவள் தான்......சகி கூட சொன்னாலே....
"சகி, இப்படியே நீ என்ன கலாட்டா பண்ணிகிட்டே இரு, நான் கிடைச்ச வழிய பாத்துகிட்டு எஸ்கேப் ஆக போறேன்"
"போங்க மாமா, சும்மா விளையாட்டுக்கு பேசறதெல்லாம் சீரியசா எடுத்துக்கிட்டு இப்படி கோவிச்சிக்கிறிங்களே'
"என்னது மாமாவா???!!!!!"
"ஆமா, மாமா தான், எங்க ஊர்ல கட்டிக்கிட்டவர மாமான்னு தான் கூப்பிடுவாங்க"

"ம்ம்ம்க்கும், எங்க நீ தான் கட்டிக்கவே விட மாட்டேங்கறயே, அப்புறம் என்ன? போடி, உன் மாமாவும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்"

"என்னது டீயா???"

"அது 'டீ' இல்லை டார்லிங் 'டி', எங்க ஊர்லலாம் கட்டிக்க விடலானாலும் பொண்டாட்டிய ‘ டி’ன்னு தான் கூப்பிடுவோம், வேணும்னா இனி டீ னு கூப்பிடட்டுமா, எனக்கு தான் டீ பிடிக்காதே, சோ அப்போ காபினு கூப்பிடட்டுமா.... ச்சா அதுவும் நல்லா இல்லையே, வேற என்ன பேர் வைக்கறது, டக்குனு எதுவும் தோண மாட்டேங்குதே... நீயே சொல்லு, உனக்கு என்ன பேர் வைக்கறது"

"மாமா, போதும், எனக்கு டீயும் வேணாம், கஷாயமும் வேணாம், என்ன ஆள விடுங்க, அது போதும்..."

"நோ, நோ, அப்டிலாம் விட்ர முடியாது, உனக்கு பேர் வச்சே தான் தீருவேன்"
"ஆஹா, சூப்பர் பேர் பிடிச்சிட்டேன், கச்சாயம்"
"என்னது, கஷாயமா???"
"கஷாயம் இல்ல சகி, கச்சாயம்...அது ஊர் சைடுல செய்யுற இனிப்பு பலகாரம்.......மேல பாக்க வேணா உன்ன மாதிரி கரடு முரடா தெரியலாம், ஆனா உள்ள அப்படி ஒரு சுவை இருக்கும்....உன்ன போலவே தான், அதனால் இனி என் ஆசை மனைவி கச்சாயம் என்றே அழைக்கப்படுவாள்.......எப்படி இருக்கு உன் பேரு"

"மாமா எனக்கு பிடிக்கவே இல்ல, அப்டிலாம் கூப்டீங்க அப்புறம் உங்ககிட்ட பேசவே மாட்டேன்"
"ஹை கச்சாயம், நில்லு கச்சாயம், இங்க வா கச்சாயம், ஆஹா கூப்பிடறதுக்கு சூப்பரா இருக்கே, இனி இப்படி தான் உன்ன கூப்பிட போறேன்"
"அப்படி மட்டும் கூப்பிடுங்க, நான் உங்ககூட பேசவே மாட்டேன், பேசறது என்ன பாக்கவே மாட்டேன்"
"அப்டியா, சரி அப்போ பேசாத, பாக்காத, ஆனா நான் அப்படி தான் கூப்பிடுவேன்....அப்போ என்ன பண்ணுவ"
"அப்போ நான் உங்களை விட்டுட்டு போய்டுவேன், அப்போ எப்படி நீங்க என்ன கூப்பிடுங்க"
"சகிகிகிகிகி.............என்ன வார்த்தை சொல்ற, என்ன விட்டுட்டு போய்டுவியா???"
"மாமா, அது, அது….. விளையாட்டுக்கு சொன்னேன்"
"விளையாட்டுக்கு, விளையாட்டுக்கு கூட இனி என்ன விட்டுட்டு போய்டுவேன்னு சொல்லாத சகி, எனக்கு உள்ளுக்குள்ள உசிரே போற அளவுக்கு வலிக்குது"
"சாரிங்க, நான் எதோ பேச்சு ஸ்வாரசியத்துல விளையாட்டுத்தனமா தான் சொன்னேன், அது உங்களை கஷ்டப்படுத்திடுச்சு, ரியலி சாரிங்க, வேணா ஒன்னு பண்ணலாம், நான் செஞ்ச தப்புக்கு என்ன நீங்க பனிஷ் பண்ணிடுங்க"

"இல்ல சகி எனக்கு மனசே சரி இல்ல, நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கேன், நீ கீழ போ"

"ஹையோ மாமா, நான் தான் விளையாட்டுக்குனு சொன்னேன்ல,இன்னும் ஏன் சீரியசா பீல் பண்றிங்க, உங்க கைய குடுங்க, அட குடுங்க மாமா, இப்போ சத்தியம் பண்றேன், என்ன நடந்தாலும் உங்களை விட்டு போக்கறதென்ன, போகணும்னு கூட யோசிக்க மாட்டேன், என் உயிர் இருக்கற வரைக்கும் உங்களுக்காக தான் வாழ்வேன், உங்ககூட தான் வாழ்வேன், எப்பவும் நான் உங்க சகியாவே தான் வாழ்வேன் இது சத்தியம்" ஆத்மார்த்தமாக அவள் என் கையில் அடித்து பதித்த சத்தியம் என்னை சிலிர்க்க வைத்தது.......
"இது போதும் சகி"
"ஹப்பா இப்போ சரி ஆகிட்டீங்களா, இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு"
"இன்னும் சரி ஆகல, நீ தான் பனிஷ் பண்ண சொல்லி கேட்டயே, அப்புறம் எப்படி அதுக்குள்ள சரி ஆவேன்"
"அப்போ பனிஷ் பன்ன போறிங்களா??"
"ஆமா, பனிஷ் தான் பன்ன போறேன், ஆனா உன்ன இல்ல, இப்படி ஒரு வார்த்தையை சொல்லி என்ன பீல் பன்ன வச்ச உன் உதடுகளை தான்"
அடுத்து பத்து நிமிடங்களுக்கு அவளின் செவ்விதழ்கள் என் இதழ்களின் சிறைகளுக்குள் தண்டிக்க பட்டு கொண்டிருந்தது.....
"ஹையோ விடுங்க மாமா, இது தான் உங்க ஊர்ல பனிஷ்மெண்ட்டா"கூறிக்கொண்டே மூச்சு வாங்க விலகியவளை இழுத்தணைத்து "அதெல்லாம் அப்புறம் சொல்றேன் இன்னும் பனிஷ்மென்ட் முடியல" என்று மீண்டும் ஒரு இன்ப சிறைக்குள் இருவரும் விரும்பியே சிறைப்பட்டோம்....

எழுதியவர் : இந்திராணி (12-Oct-16, 1:45 pm)
பார்வை : 721

மேலே