பாலைவனம்

பாலைவனம்

மணலால் ஆன
கடலாய்
எல்லையறியா
திடலாய்

அங்குமிங்கும்
அலையாமலும்
குலையாமலும்
நிலையாய் நிற்கும்
அலைகளாய்
எங்கும் நிறைந்த
மணல் மேடுகளும்

பசுமை வளம்
இல்லையெனினும்
கனலாய் கொதிக்கும்
மணல் வனத்தையே
ஒரு உலகாய்
கொண்டு
அதில் புதைந்தும்
மறைந்தும்
ஒன்றையொன்று
சார்ந்தும்
வாழும்
உயிர்களுமாய்

வெம்மையும்
வெறுமையுமாய்த்
தோன்றும்
பாலைவனத்திற்க்கும்
எண்ணை வளத்தில்
பங்கும்
பெருமையும் உண்டு.

எழுதியவர் : PG வெங்கடேஷ் (12-Oct-16, 5:52 pm)
Tanglish : palaivanam
பார்வை : 878

மேலே