விளையாட
#விளையாட:
சில்லரையாய் சிதறிய
நட்சத்திரங்களை விடுத்து
சிவனின் சிகையை
அலங்கரித்த
பிறை நிலவை
சுருக்கிட்டு இழுத்து
வந்து
என் வீட்டு முற்றத்தில்
கட்டி வைத்து
இரவை பகலாக்குவேன்
என் நண்பர்கள்
என்னோடு விளையாட!
#sof_Sekar