தயக்கத்தை கொன்று வெற்றி வாகை சூடு

தன்னால் முடியுமென
நினைப்பவன் வாய்ப்பு
கிடைத்ததும் உடனக்குடன்
தனது சாகசத்தை
நிகழ்த்தி விடுகிறான்

தயக்கம் உடையவன்
கடைசி வரை தனது
வாய்ப்புகளை தானம்
மட்டுமே செய்கிறான்

நீ தயக்கத்தை வென்று
உனது சாகசத்தை நிகழ்த்து
வாய்ப்பென்பது அடிக்கடி வராது
கிடைத்தால் ஒருகை பாா்த்து விடு

தயக்கத்தை கொன்று!
வெற்றி வாகை சூடு!

எழுதியவர் : கோ.ஜெயமாலினி (14-Oct-16, 8:00 am)
பார்வை : 677
மேலே