ஒரு வழியை காண்பித்துவிட்டு

நம்பி இருப்பவர்களிட்கு
ஒரு வழியை
அமைத்துக்கொடுத்துவிட்டு
என் இருவிழிகளையும்
இறுதிமுறையாக
மூடிவிட்டு போ......
என்றே தினமும்
இந்த தனிமையின்
வேதனை சொல்லிப்போகிறது.....!!

நெஞ்சம்
வலிக்கிறது
நெருக்கம்
கூடியது......இந்த
அப்பனின்
தனிமை
கொடியது......
இவன் மனமோ
எப்போதுமே
வாடியது......உயிர்
விட்டு
வேறுலகம்
போகவே
விடை
தேடியது.......!!

கைப்பொம்மையாய்
வாழ்ந்தேன்
கால்வேறு
கைவேறாய்
கரையொதுங்கிக்
கிடந்தேன்......காண்போர்
ரசித்தார்
சிரித்தார்
ஏனோ
அவர்கள் கரங்கள்
முடங்கிப்போனது......என்னுயிரோ
அடங்கிப்போனது......!!

அன்று
தீராத
நேசத்தை
சுவாசத்தில்
வைத்தேன்......
இன்று
தீயாகி
தேகம்
சுடுகிறாய்.....புரிகிறது
காதல் கொல்லுமென்று
நீயோ
காதலாகி
கொல்கிறாய்......!!

பசிமயக்கம்
பழகிப்போச்சு......
நோய்நொடியும்
தினம்
தினம்
மாத்திரை என்றாகிப்போச்சு......
நித்திரையும்
அவுன்ஸ் கணக்காய்
அளவு
குறைஞ்சு போச்சு......
இனி எப்போதுதான்
போகும் என்
மூச்சு?

கண்கெட்ட எனக்கு
கதிரவனோடு
கதை என்ன
கிடக்கு.....காலம்
மாறிப்போச்சு
இதிலே வடக்கென்ன
கிழக்கென்ன
வாழ்ந்தவரை
போதும் வாழ்க்கையில்
வந்தவளை
நினைத்துக்கொண்டே
கண்மூடி
கால்கட்டி
கலவரமாக
நான்போகிறேன்
தூரப்பயணம்.......!!!

எழுதியவர் : thampu (14-Oct-16, 3:50 am)
பார்வை : 186

சிறந்த கவிதைகள்

மேலே