இனி ஒரு விதி செய்வோம்

போரின் கொடூரத்தால்
தாய் தந்தையை இழந்த இவன்
யாருமற்ற அநாதையாய்
தவிக்கிறான் தனிமையில்!!

மாமரத்தில் படருகின்ற
குருவிச்சை போல் துன்பத்தின்
சுவடுகள் நிரையாய் அவனை
பின் தொடர்கின்றனவே!!

பரந்த மக்கள் வாழும் இவ் உலகில் அனைவருடனும் சேர்ந்து
வாழ துடிக்கிறது இவ் உயிர்!!

உண்ண உணவில்லையாம்
உறங்க வீடில்லையாம்
வீதியின் ஓரத்தில் தூங்குகின்றான் பசியை மறந்தவனாய்!!

புத்தகங்கள் சுமக்கும் வயதில் கவலைகள் வேதனைகளையும் சுமந்தவனாய் வாழ்கின்றான் வீதியிலே
யாருமற்ற ஓர் அநாதையாய்!!

அதிக பணப்புழக்கம் நிறைந்த
உலகில் ஆடம்பர வாழ்வுடன் வாழ்பவர்கள் அவனது நிலையை பார்த்தும் செல்கின்றனர்
முகத்தை சுழித்துக் கொண்டு!!

மனிதன் வாழ்கின்றான்
மானிதாபிமானம் அற்றவனாய்!!

அநாதையாய் வாழும் வீதியில்
ஆதரவற்று இருக்கும் சிறுவர்களை
உன் சொந்தமென்று வாழ்நாள்
முழுதும் ஆதரவு கொடு!!

அவர்கள் கல்வியைக் கற்றிட வழியமைத்திடு இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை கருத்தில் கொண்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து
இனி ஒரு விதி செய்வோம்!!!!!

எழுதியவர் : சி.பிருந்தா (14-Oct-16, 2:01 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 113

மேலே