சிகிரியா
சுமார் இருமில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், எரிமலை வெடித்து அதன் எரிமலைக் குழம்பு காலப்போக்கில் உரைந்ததினால் தோன்றியவையே சிகரியாவும், பிதுரங்கல குன்றுகள். சிகிரியா கொழும்பிலிருந்துவடக்கே165 கிமீ தூரத்திலும, தம்புள்ளவில்ல இருந்து 15 கிமீ தூரத்தில் அமைந்த கிராமம். வெளிநாட்டுச்சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் விரும்பி பார்க்கும் இடங்களில், சிகிரியாவும் ஒன்று. இக குன்றில் இருந்து 1 கி.மீ தூரத்தில் பிதுரங்கல குன்று உண்டு.
சிகிரியா என்றவுடன் எம் கண்முன் நிற்பது 200 மீட்டர் உயரமுள்ள குன்றும், சிகிரியாச் சித்திரங்களுமே. அச்சித்திரங்கள், இந்தியாவில் உள்ள குப்தா மன்னர் காலத்தில் வரையப்பட்ட, அஜந்தா குகைச் சித்திரங்களப் போன்றவை. கலை ஆர்வம் உள்ள மன்னரால் உருவாக்கப்பட்டவை. இன்றும் பிரசித்தம் பெற்ற சித்திரங்கள். இவை 15 நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டவை.
.
தாதுசேனன் மன்னன். தனது மருமகனும், சகோதரியின் மகனும், பிரதான தளபதியுமான மிகாராவின் வெறுப்புக்கு ஆளானான், காரணம் தாதுசேனனின்னஅன்புமகளை மனைவி என்று பாராது, மிகாரா சவுக்கால் அடித்துத் துன்புறுத்தியதே. அதற்குப் பழி தீர்க்க, மிகராவின் தாயை தாதுசேனன் எரித்துக் கொன்றான். காசிப்பாவின் தாயின் சகோதரன் மிகாரா. காசியப்பனுக்கு தூதுசேனனின் மேல் உள்ள வெறுப்பைத் தனக்கு சாதகமாக பயன்படுத்த மிகாரா திட்டமிட்டான். காசிப்பன், மிகராவின் உதவியோடு தந்தையைக் கொல செய்தான். தாதுசேனனின் உடலை சிறைச்சாலை சுவருக்குள் வைத்து பூசி மெலுகினான் மிகாரா. இது நடந்தது காசிப்பனின கட்டளைப்படி. வரலாற்றுச் சான்றுகள் வேறுபட்ட விதமாக தாதுசேனனின் கொலையைச் சித்தரித்துள்ளது. காசிப்பன்> மன்னன் என்பதால் அவன் மேல் பழியைச் சுமத்தாமல் மிகராமேல் பழியைச் சுமத்தியது. தாதுசேனனின் உடலை கலாவெல குளத்தின் அணைக்கட்டில் புதைத்தார்கள் என்றொரு கதையும் உண்டு. எது எப்படி இருப்பினும் தாதுசேனனின் மரணத்துக்கு காசியப்பனின் பழி தீர்க்கும் நோக்கமே காரணமாயிருந்தது.
புத்த மதத்துக்கு எதிராக காசியப்பன் செயற்பட்டதால், அவனை மக்களும், புத்த பிக்குகளும் வெறுத்தனர். மக்களின் வெறுப்பிலிருந்து தன்னை மீட்க பல நல்ல காரியங்களை காசியப்பன் செய்தான். ஆனால் மக்களும் புத்த பிக்குகளும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தனது அமைதியற்ற மனநிலையில் இருந்து தன்னைப் பாதுகாத்துகோள்ள தன் அனுராதபர தலைநகரத்தை விட்டு விலகி, புது தலைநகரமொன்றை அமைக்கத் திட்டமிட்டான். அதனால் சிகிரியா என்ற குன்றில் புது தலை நகரத்தை அமைத்தான். அது தனக்கு மன நிம்மதியை கொடுக்குமென காசியப்பன் நினைத்தான். ஆனால் தகப்பனைகொன்ற பாவம் அவனை விட்டு நீங்கவில்லை.
600 அடிகள் உயரமுள்ள சிகிரியா குன்றம் வனத்தால் சூழப்பட்டது. தனது புது தலைநகரத்துக்கு சிகிரியா உகந்த இடமாக அவன் மனதுக்கு பட்டது. செல்வத்துக்கு அதிபதியான குபேரன் ஆட்சி செய்த அழகாபுரி நகரத்தைப் போலவே தன் நகரமும் அமையவேண்டும் என்பது அவனது ஆசை.
குன்றத்தின் மேல் அவன், தான் வாழ்வதற்கு கோட்டையை அமைத்தான். அங்கு அழகிய பூந்தோட்டமும், குளிப்பதற்கு நீர் தடாகங்களையும் தோற்றுவித்தான். குன்றத்தின் மேற்கு பக்கத்தில் அழகிய அரை நிர்வாணப் பெண்களின் 500 சித்திரங்களை, இந்தியாவில் உள்ள அஜந்தா குகைச் சித்திரங்களைப் போன்று, ஓவியக்; கலைஞர்களைக் கொண்டு வரைவித்தான். அப்பெண்கள் பற்றிய விளக்கமும், வரைந்த சித்திரக் கலைஞர் யார் போன்ற விளக்கங்களும் இல்லை. காலப்போக்கில் அச்சித்திரங்களில் பல மழை, காற்று காரணங்களாலும், மனிதர்களின் நாச வேலைகளிலாலும் அழிந்து போயின. அச்சித்தரங்களில் சில இன்றும் இலங்கையின் சரித்திர வரலாறு படைத்த ஓவியங்களாக கருதப்படுகிறது.
அவ் ஓவியங்களில் காட்சியளிக்கும் பெண்கள்கள அபரஸ்கள் எனவும், தாரா என்ற பெண் தெய்வம் எனவும் பல விதமாக கருத்து தெரிவித்தனர் வரலாறு எழுதியவர்கள் . சிலர் அவ் இளம்பெண்கள் காசியப்பனின் அந்தப்புரத்து பெண்கள் எனறும் விளக்கம் கொடுத்துள்ளார்கள். காசியப்பன் வானத்தில் தனது கோட்டை இருப்பதாகக் கனவு கண்டு குன்றத்தில் மேகங்களை வரைந்தான். அது கவர்ச்சியாக இல்லாத படியால் பார்த்;தவர்கள் இரசிக்கக் கூடிய பெண்களின் சித்தரங்களை வரைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து.
புத்த பிக்குகளின் ஆதரவைப் பெறாத காசியப்பன்> கோபத்தை அவர்கள் மேல் காட்ட பெண்களை சித்திரமாக வரைந்தான் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர். சித்திரத்தில் சில பிழைகள் இருக்கிறது என்பது சிலர் கருத்து. எது எப்படியானாலும் குப்தா சக்கரவர்த்தி காலத்தில் வரையப்பட்ட அஜந்தா குகைச் சித்தரங்களைப் போன்றவை சிகிரியா சித்திரங்கள். காசியப்பனுக்கு சித்திரக் கலையிலும் கவிதை புனைவதிலும் ஆர்வமுண்டு என்கிறது வரலாறு.
14 வருடங்கள் சிகரியா கோட்டையில் இருந்து காசியப்பன் ஆட்சி புரிந்தாலும் தன தந்தையைக் கொலசெய்த நினைவினால் பாதிக்கப்பட்டான். அவனது இராணுவ தளபதி மிகாராவுக்கும் அவனுக்கு மிடையேலான உறவில் பாதிப்பு ஏற்பட்டது. மிகாரா பெரிய விழாவொன்றை நடத்த காசிப்பன் அனுமதி வழங்காததே அவர்களுக் கிடையேலான உறவு பாதிப்டைய தோன்றுவதற்கு காரணம் என்கிறது வரலாறு. மிகாரா மறைமுகமாக காசியப்ப்னின் சகோதரன் மொகலானவுக்கு உதவிசெய்தான். அச்சமையம் மொகலானா,காசிப்பனுக்கு எதிராக போர்புரிய தென் இந்தியாவில் இருந்துபடி, படை ஒன்றை திரட்டிக் கொண்டிருந்தான்.
கி.பி 495 இல் காசிப்பனுக்கும், தென் இந்தியாவில் இருந்து படையோடு திரும்பிய அவன் சகோதரன் மொகலானவுக்கும் இடையே போர் நடந்தது. அந்தப்போரில் காசியப்பனின் இராணுவத் தளபதி மிகாரா மறைமுகமாக மொகலானவுக்கு ஆதரவு வழஙகினான். போரில்> காசியப்பன் தனது யானை மேல் ஏறிச்சென்ற போது ஒரு சதுப்பு நிலத்தை எதிர்கொள்ள நேர்ந்து. அதனால் போர் புரிய உகந்த இடமொன்றை காசிப்பன் தேடித் திரும்பியபோது அவனது படைகள் மன்னன் பயத்தால் திரும்புகிறான் என நினைத்து படை சிதறி ஓடியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மொகலான தன் சகோதரன் காசியப்பனை தாக்கினான். தனது தம்பியிடம் தோழ்வியை ஒப்புக்கொண்டால் தான் கைதாக வேண்டும் என அறிந்ததால், காசியப்பன கத்தியால் தன் கழுத்தை வெட்டி, தற்கொலை செய்து கொண்டான். போரில் வெற்றி பெற்ற மொகலான கி.பி 495 இல் மன்னனானான். சிகிரியாவில் இருந்து தனது ஆட்சியை அனுராதபுரத்துக்கு மாற்றினான். விதவையான காசியப்பனின் மனைவியைத் திருமணம் செய்து கொணடான். காசியப்பனின உடல் சிகிரியாவுக்கு அருகே உள்ள பிதுரங்கல குன்றில் புதைக்கப்பட்டது என்கிறது வரலாறு.
*****