என் காதல் சொல்ல
![](https://eluthu.com/images/loading.gif)
பனி போர்த்தும் காலை நேரம் , ஒளி கொஞ்சம் எட்டிப் பார்க்கும், வரிகளில்லா பாடல்கள் பல பறவைகள் பாட, மேள தாளம் மேடைகள் இன்றி மரக்கிளைகளும் ஆட, விழிதிறக்கும் முன்னே, என் கனவெல்லாம் பெண்ணே, பிரிய மறுத்தாயடி, எந்தன் துயிலும் கெடுத்தாயடி... !
அலைபோலே தொட்டுச் சென்றாய், மழைத்துளியாய் கொட்டித் தீர்த்தாய், உனை தொடர துடிக்குது என் பாதங்கள் வழித்துணையாய், கொஞ்சம் இடறி விழுகிறது என் இதயம் செதில் செதிலாய், என் மனம் மறத்துப் போகும் முன்னே, உன் காதலையும் கொஞ்சம் சொல்லிவிடு கண்ணே...!