கண்மணியே

மொழியின்றி உணர்வுகளை
விழிப்பேச்சில் விளங்கவைத்தாய் !
வழிமாறிப் போகாமல்
பொழில்வளியாய் வருடுகிறாய் !

மடியணையில் இடம்தந்து
துடியிடையால் மயங்கவைத்தாய் !
நொடிப்பொழுதும் விலகாமல்
அடிமனதில் இடம்பிடித்தாய் !

தலைகோதி என்மனதை
அலைபாய வைத்துவிட்டாய் !
சிலைபோலும் எழிலாலே
வலைவீசிப் பிடித்துவிட்டாய் !

சகியேவுன் அரவணைப்பில்
மகிழ்ச்சியிலே மிதந்திருப்பேன் !
முகிலிடுக்கில் மதிமுகமாய்
வகித்திடுவாய் கண்மணியே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (18-Oct-16, 4:19 pm)
பார்வை : 75

மேலே