கஞ்சகி

பூம்பூம் மாட்டுக்காரர்
உச்சஸ்தாழியில் வாசித்த
நாதஸ்வரத்தைக்கேட்டு…
பத்து ரூபாய் பிச்சையிடப்போன
பக்கத்து வீட்டு புண்ணியவதியை…
எளக்காரமாய் பார்த்த
எதித்த வீட்டு எஜமானியம்மா..
தன் வீட்டை நோக்கி
பூம்பூம் மாட்டுக்காரர் வருவதைப் பார்த்ததும்
படார் என்று கதவை சாத்தி
உள் தாழ்ப்பாள் போட்டு
உறங்குவதுபோல் நடிக்கத் தொடங்கினார்.

எழுதியவர் : சாய்மாறன் (20-Oct-16, 10:39 am)
பார்வை : 51

மேலே