ஆத்தா நான் காதலில் பாசாயிட்டேன்

மனதில் ஒரு மழைத்துளி விழுந்து,
உரிமையாய் காதல் உடை பூண்டது!
என் கண்மணி எட்டிபார்த்த்தில்,
சந்தோஷத்தில் கைகளில் செல்பி ஒன்று விழுந்தது..... கண்ணீர்த்துளியாய் !!
ஆத்தா நான் காதலில் பாசாயிட்டேன்...

உன் விழிகளில் எனை சிறைவைத்தாய்.....
உன் தாபத்தால்!
நானோ உன் கண்ணீர்முழுதும் பருகிவிட்டேன்...காதலின் தாகத்தால்!
பின்புதான் உணர்ந்த்தேனடி ,
அவையெல்லாம் எனக்காக எழுதிய காதல் கவிதைகளென்று!!
மன்னிப்பாயா மலர்விழியே...
ஆத்தா நான் காதலில் பாசாயிட்டேன்...

விரல் விளக்கைத் தூண்டுகையில்,
ஜோதி இரவைக் குடித்து ,
அறை முழுவதும் ஆக்கிரமிக்கிறாள் !
காதல் எனைத்தீண்டுகையில்,
நீ என் மூச்சைக் குடித்து ,
என்னுடம்பெங்கிலும் பரவுகிறாய் ....குருதியாய்!!
அகிலத்தையே மறந்து போகிறேன்....உன் இளமைச் சண்டையில் மெல்ல மெல்ல!!
ஆத்தா நான் காதலில் பாசாயிட்டேன்...

பெண்ணே!
உன் வெட்கத்தின் சாயலில்,
ஷேக்ஸ்பியரின் கவிதைகளை படித்தேன்.......ஆங்கிலப்புலமை இல்லாமலே!!

உன் இளமை ஆடுகளத்தில்
மழைத்துளிகள் உளவு பார்த்துச்
சொன்னதடி.....நீ கல்நெஞ்சக்காரி என்று!!
பூமிக்கு விருந்தாளியாய் வந்த மழையும் ,
உன்னை அடைந்ததால்,அது முகவரி மாறிச்
சென்றதடி .....சொர்க்கத்திற்கு சொகுசுப் பயணமாக !!
ஆத்தா நான் காதலில் பாசாயிட்டேன்...

எழுதியவர் : பாரதி பறவை (21-Oct-16, 4:03 pm)
பார்வை : 96

மேலே