பூ சூடிய பொட்டு நிலவு
வெள்ளை புறா உடைமுகம் நிலா
உன்செவி மயிலாய் இறகுமது அமையுதே
நெற்றி கொண்ட மின்னல் சொட்டு
கலங்கி வழிந்தது புருவமிடை பொட்டுமாயுதே
மல்லி கோர்வை கூந்தல் வழிகறு
வெள்ளை காற்று கண்மணியுன் சிலையுமாயுதே
முடி வாரிய உன்னது அழகுகையில்
முகபாவை மூழ்கி பெண்தோற்றம் முழுமையுமாயுதே
பிள்ளை கன்னம் காணும் அக்கனவிளையாட்டில்
சறுக்கி விழுகிறேன் பாசம்படர்ந்த பாறையுமாயுதே
குண்டுகோலி கண்ணை சின்ன இறகில்
பார்த்தே சிறகிழந்து நடக்கும் பறவையுமாயுதே