கிளியே கிளியே தூது போ!

கிளியே கிளியே தூது போ - என்
தலைவியை தேடித் தூது போ
கனவை அள்ளிப் போ போ - என்
காதலைச் சொல்லப் போ போ
நித்தம் பொங்குது இதயம் - அவள்
திருமுகம் தேடுதுக் கண்கள்
கிளியே கிளியே தூது போ - என்
நிலைமைச் சொல்லத் தூது போ
தனிமைப் போக்க வருவேன் - மிகு
இனிமைச் சேர்க்க வருவேன்
கிளியே கிளியே தூது போ - என்
வருகையைச் சொல்லத் தூது போ
சங்கீத கட்டில் பாடும் பாட்டில்
சந்தங்கள் கொண்டாடும்
புத்தம் புதுசு வெள்ளிக் கொலுசு
புதினங்கள் என்றாடும்
கிளியே கிளியே தூது போ - என்
வருகையைச் சொல்லத் தூது போ!
அள்ளி அணைக்க வருவேன் - வாச
மல்லி சூட்டிட வருவேன்
நெஞ்சில் புதைந்திட வருவேன் - மலர்
மடியில் உறங்கிட வருவேன்!
ஊணில் உறைந்திட வருவேன் - அரு
உயிரில் கலந்திட வருவேன்
கிளியே கிளியே தூது போ - என்
வருகையைச் சொல்லத் தூது போ!