ஆட்டோகிராப் - தனஞ்சன்

ஆட்டோக்ராப் என்பதை
நான் இதுவரை நினைத்திருந்தேன்
செத்துப்போன வாசகங்களை சேகரிக்கும்
இத்துப்போன பெட்டகம் என்று

இல்லை அது விட்டுப்போகும்
உறவுகளுக்கு எழுதும் மரண சாசனம்

நானும் எழுதியதுண்டு பக்கம் பக்கமாய்
நானும் எழுதியதுண்டு பக்கம் பக்கமாய்

பொய்களின் பொதிகளை கோர்த்தெடுத்து
வரி வரியாய் வாந்தியெடுக்கும் செத்துப்போன வாசகங்களை

என்றாலும் இன்னும் ஞாபகம் இருக்கிறது
நான் வடித்த என் இதயத்துடிப்புகள் ......

பேசா மொழிகளும் உன் விழிகள் பேசும்
ஆசை வேதனமோ நர பழியை கேட்கும்
மீசை துளிர்க்கையில் இளமை துளிர்க்கும்
அதில் நீ நீ என்ற புது சரணம் கேட்கும்.

என் கனவுக்கு விருந்தளிக்க நினைவுகள் காத்திருக்கிறது
காலங்கள் கடக்கிறது கடன்கள் சரிக்கிறது.....
என்றாலும் காத்திருக்கிறது.

ரணங்கள் இல்லை.

அந்த வரிகளின் கடவுகளை நிஜமாக்க மனம் காத்திருக்கிறது.

உண்மைதான் ஆட்டோக்ராப் என்பது
விட்டுப்போகும் உறவுகளுக்கு எழுதும் மரண சாசனம்.

தனஞ்சன்

எழுதியவர் : தனஞ்சன் (22-Oct-16, 8:03 am)
பார்வை : 331

மேலே