நாங்கதான் செத்து மடியறோம்

விளைஞ்ச நெலமும் காஞ்சிப் போச்சே
மேய்கின்ற மாடும் வாடித்தான் போகுது !
பெய்திடும் மழையும் பொய்த்துப் போச்சே
காவேரித் தண்ணியும் வரத்துக் குறையுது !
வாழ்வும் எங்களுக்கு செத்துப் போச்சே
வயலும் வயிறும் பசியால் துடிக்குது !

கையை விரிச்சான் கர்நாடகா அரசும்
கருணை காட்டுது உச்சத்தில் நீதியும் !
போனை எடுத்துப் போட்டுப் பாத்தேன்
சர்க்கார் காதிலே சங்காய் ஊதிட்டேன்
நடுவர் மன்றமும் அமையவே இல்லை
நடுவில நாங்கதான் செத்து மடியறோம் !

( சர்க்கார் = அரசாங்கம் )

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (22-Oct-16, 8:17 am)
பார்வை : 798

மேலே