முதிர்ந்தாலும் உதிராத காதல்

உண்மை அன்பு உள்ளவரை நிலைக்கும்
உள்ளத்தில் ஊன்றி உறுதிபட தழைக்கும் !
இதயமதும் இணையும் இல்லற வாழ்வில்
இருமனம் ஒன்றாகும் ஓருயிர் ஈருடலாய் !
அகவைக்கு அளவும் அன்புக்கும் தடையிராது
உணர்ந்த நெஞ்சில் புரிதலுக்கும் குறையிராது !
ஈர்த்திடும் உள்ளங்கள் சேர்த்திடும் இதயத்தில்
பாசத்தைப் பன்மடங்கு பாரினில் வாழும்வரை !
முதிர்ந்த வயதானாலும் உதிராது காதலும்
பகிர்ந்திடும் அன்பை பரிமாற்றம் தொடரும் !
பற்றியக் கரங்களும் வெற்றிடம் காணாது
வற்றாத உணர்வுகளால் வறட்சியும் வாராது !
பழனி குமார்