பட்டிக்காட்டு பட்டுப்பூச்சி

பறந்தால் மட்டுமே பசிதுறக்க முடியுமென
விரைந்து சிறகடிக்கின்றது பட்டிக்காட்டு பட்டுப்பூச்சி...

தேன்சுரக்கும் மலர்களைத் தேடித்தேடியே வாழ்வதனைத் தொலைத்து
மான்சிக்கிய வேடன்வலைபோல் சிலவேளையில் சிக்கிக்கொள்கிறது...

சிக்கிய வலையில்மேல் சினமில்லை எனினும் தப்பிக்க தாமதமாக
மக்கிய மலர்கள்கூட மண்ணில் புதைந்தால் தன்விக்கிய பசியினை எப்படியாற்றுவது...?

தேன்சுனை தொற்றிய வலையென அறியாது
தெரியாமல் பற்றிக்கொண்ட பாசவலையில் சிலபெண்களின் காதல்...

#பாதையில்_பரிதவிக்கும்_பரிமளம்

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (22-Oct-16, 7:07 am)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 187

மேலே