உன் பார்வை

உன் பார்வைகள் தானே
எந்தன் வாழ்வின் ஆதாரம்..
நீ வீசிடும் ஒற்றை பார்வையில்
எந்தன் உயிர் நாடி உள்ளதடி..
உன் ஒற்றை பார்வைக்காக
உன் விழி தேடி காத்திருந்தேன்..
உன் பார்வையில் உள்ளதடி
என் வாழ்வின் அர்த்தம்..
உன்னை பார்க்காத நேரங்கள்
என் வாழ்வின் இருண்ட பக்கங்கள்
உன் பார்வையில் உள்ள போதையால்
நானும் மயங்கி போனேனடி..
உன் விழி அசைவில் உள்ளதடி
என் வாழ்கைக்கான பாதை..
நம் காதலை பார்வையாலேயே
பரிமாறி கொண்டோம்..
என் வாழ்வின் மிச்ச நாட்களை
உன் பார்வையாலே கடத்தி சென்றாயே...

எழுதியவர் : கா. அம்பிகா (22-Oct-16, 2:58 pm)
Tanglish : un parvai
பார்வை : 184

மேலே