காணாமல் போனது

எழுந்த இடம் விட்டு
எங்கெங்கோ ஊர் சுற்றி
உண்டான களைப்பில்
உக்கிரம் தணிந்து
மெல்ல மெல்ல
தலை சாயுமாதவன்

வண்ணக் கலவையை
வாரி இறைத்து
வானத்தை ஒளியூட்ட வைத்து,
அந்தி பொழுதின்
பொன்னிற வெளிச்சம்
மண்ணை முத்தமிட்டு


ஒத்தையிலே நிக்கும்
ஓலக்குடிசை ஒன்றில்
கள்வனைப்போல் புகுந்து
வெளிவர முடியாமல்
தத்தளித்து
அங்குமிங்கும் ஓடி

சுவரு, அலமாரியென
ஏறிக் குதித்து, விழுந்து
அடிபட்டு, வேறு வழியின்றி
உறங்கியபோது
காணாமல் போனது.

எழுதியவர் : கோ.கணபதி (23-Oct-16, 8:03 am)
Tanglish : kanaamal ponathu
பார்வை : 95

மேலே