காதல் கல்லறை
எங்கிருந்தோ வந்து
என் மனத்தைக் கவர்ந்து
காதல் கொண்டான்
நானும் என்னை மறந்தேன்
அவனிடம் தஞ்சம் புகுந்தேன்
என்னையும் தந்தேன்
காதலராய் சில காலம்
ஆடி பாடி ஆனந்தமாய்
அங்கும் இங்கும் திரிந்தோம்
அன்றொருநாள்
காதல் மயக்கத்தில்
அவன் விரித்த
மோக வலையில்
கட்டுண்ட நான்
அவன் அணைத்த
கைகளில் கட்டுண்டேன்
பின் நித்திரை
என் கண்களை தழுவ
கனவுலகிற்கு உலாவச்சென்றேன்
காலைப் புலர்ந்தது
கண் விழித்தேன்
சுற்று முற்றும் பார்த்தேன்
என் காதலனைக் காணவில்லை
காலைப்போய் , பகலும் போய்
அந்திப் பொழுது வந்தது
காதலனைக் காணவில்லை
இன்றுவரை இன்னும் காணவில்லை
என் வாழ்க்கை
அந்த வால் அறுந்த
காற்றாடி போல் ஆயிற்றே
காற்றும் நின்றது
வாலறுந்த காற்றாடி
அந்த மரக்கிளையில் சிக்கி
சின்னா பின்னம் ஆனது
என் காதலும் சிதைந்து
என்னுடன் அழிந்து போனது
இது நானே எனக்கு
தேடிய கல்லறையோ