ஹைக்கூ முயற்சி 2

உபசரிக்கும் வரை
உயிரை எடுக்கும் விருந்தாளி
பசி...!

வளரும் வரை வளர்த்துவிடும்
வளர்ந்த பின்னே புறம் தள்ளும்
வகுப்பறையும்..கருவறையும்..!

விரிந்த பூவிதழ்கள்
மீண்டும் குவிகிறது
முத்தம் அரும்புகிறது...!

துளி நேர இருட்டு
அதிசிய மின்னல்
அவள் கண்சிமிட்டல்...!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (24-Oct-16, 4:13 pm)
பார்வை : 252

மேலே