காதலை உன் விழி பார்த்து சொல்லவேண்டும் உன்னிடம் 555
![](https://eluthu.com/images/loading.gif)
என்னுயிரே...
நீயும் நானும் சந்திக்கும் புள்ளிக்கு
தாமதித்து வந்தால்...
யாராவது ஒருவர் முகம்
திருப்பி கொள்வோம்...
பூங்காவின் இருக்கையில் நூலளவு
இடைவெளி விட்டிருந்தாலும்...
நம் கைகள் ஒன்றாக
இணைந்திருந்தது...
என்னோடு இருக்கும் நேரங்களில்
உனக்கு பேருந்து வந்தும்...
செல்லாமல் விட்டுக்கொண்டு
இருந்தாய் தயக்கத்துடன்...
நாட்கள் முடியாத
நாட்காட்டி கேட்டாய்...
வார்த்தைகள் வராத போது
கண்களால் பேசினாய்...
உன் வாய் பொத்தி சிரித்தாய்
நம்ப முடியாத சொல் என்று...
தலை கவிழ்ந்து அழுதாய்
சொல்லமுடியாத சொல் என்று...
என் காதலை எப்படி
வெளிப்படுத்துவேன் உன்னிடம்...
அன்பே என் கண்களை
நேருக்குநேர் பார்...
என் காதலை உன் விழி பார்த்து
சொல்லவேண்டும் உன்னிடம்.....