உன் உதட்டோரம்
உன் உதட்டோரம்
""""""""""""""""""""""""""""""""
காயபட்ட என் மனம்
மகிழ, உன் உதட்டோர
புன்சிரிப்பு ஒன்றே
போதுமடி....
நாம் கொண்ட
சிறு சிறு ஊடல்
மறைய, உன் உதட்டின்
ஒரு முத்திரை போதுமடி....
நாம் வாழும் நாட்கள்
மனதில் கல்வெட்டாய்
பதிய, நீ கூறும்
ஒரு வார்த்தை போதுமடி..
என்றும் நம் வாழ்க்கை
வண்ணமயமாய்
தொடருமென உன்
உதட்டின்சாயம் சொல்லுதடி..
மனோஜ்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
