காதல் திசை நானே

திரும்பி பார்
திரும்ப வருகிறேன்...

திருப்பி சொல்
காதல் செய்கிறேன்..

திருத்தி கொள்
காதலன் நானே என்று..

திருடாதே தினம்
ஒரு காதலன் என்று..

திருமணம் செய்து
தினம் தினம் காதலிப்போம்..

திசை தெரியாமல்
திண்டாடாதே...

காதல் திசை நானே என
என்னை நோக்கியே வந்துவிடு....

காதல் புயலாய்
புன்னைகையோடு வாழ்ந்திடுவோம்...

எழுதியவர் : மன்சூர் அலி சவூதி அரேபியா (26-Oct-16, 11:38 am)
பார்வை : 63

மேலே