உள்ளம் கொல்லல் பிழையாகும்

மனிதனாய் பிறந்தவர் நலத்துடன் இருந்திடல்
என்றும் சகலர்க்கும் நல்லது
உடல் உறுப்பில் ஏதேனும் குறையெனில்
அவருக்கும் எவருக்கும் கஷ்டமே
அதனதன் பணிகளை செவ்வனே செய்திடல்
அமைதியாய் வாழ்வினை ஆக்கும்
காலதின் பணிகளை கைகளே செய்திட்டால்
வாழ்க்கையே சோதனை ஆகும்
காலின் ஓட்டம் கைகளுக்கு வராது
கைகள் கால்போல் நடக்காது
கைகள் கால்போல் தினமும் உழைத்தால்
கையின் பணிகள் செய்வதாரு?
கைகளின் உதவி மிகப் பெரியது
அதுவும் இன்றேல் என்னாவது?
செய்திடும் வேலைகள் மெதுவாகவாவது நடக்கும்
கைகளில் விழுந்திடும் காலானது..
கேலிப் பொருளல்ல ஊனம் உடையோர்
சிரித்தல் வெறுத்தல் தவறாகும்
உதவிச் செய்தல் கூட வேண்டாம்
உள்ளம் கொல்லல் பிழையாகும்
கைகளின் பணிக்கு ஆயிரம் சரணம்
மெய்யாய் உடலைத் தாங்குகிறதே
கைகளின் பணியை ஈடு செய்ய
வாழ்நாள் எல்லாம் முடியாது