இதயம் எரித்தாய்
உள்ளத்தின் இருளகற்ற ஒளிச்சுடராய் வந்தாய்!
உணர்வற்று இருந்தேன் உயிரூட்டினாய்!
தீப திருச்சுடரை இருகரம் இருத்தி இமைக்க மறந்த மறுநொடியில்
தீப்பந்தாய் சுழன்று இதயம் எரித்தாய்!
நாவினால் ஒருமுறையே சுட்டாய்
நினைவினால் மீண்டும் மீண்டும் சுட்டுக்கொ(ல்)ள்கிறேன் நான்!
என்
உறைநிலையையும்
உருகுநிலையையும்
உணர்ந்தவள் நீ மட்டுமே
என்பதை
உணராததேன்?