காதலியே என்னை கொன்று புதைத்து விடு ...................



துடிக்க மறுக்கிறது
உன்னை மட்டுமே
சுமந்த என் இதயம்

உன்னை
பார்க்க முடியாது
என்று தெரிந்தும்
தேடுகிறேன் வீதிகளில்

கொட்டும்
மழை துளிகளிலும்
சிதறாமல் தேடுகிறேன்
உன் பாத சுவடுகளை

மஞ்சள்
வெயிலிலும்
என் கண்ணீர் துளிகளோடு
காத்து நிற்கிறேன்
நீ போன பாதை நோக்கி

குளிர் இரவிலும்
உன் நினைவுகளை
போர்த்திக்கொண்டு
தூக்கமின்றி புரண்டு
எழுகிறேன்

மேகங்களோடு
விளையாடும்
சின்ன சின்ன
நட்ச்ச்சத்திரங்களிடம்
உன்னிடம் சொல்லாத
என் காதலை சொல்லி
புலம்புகிறேன்

அதிகாலையில்
சூரியன் உதித்தாலும்
என் அருகே நீ இல்லாத
இந்த உலகம்
இன்றும் இருளாகவே
தெரிகிறது

என் வாழ்க்கை
ஒளிமயமாக என் அருகே
வந்துவிடு
இல்லையேல்
நீ வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்த மண்ணிலேயே
மண்ணோடு மண்ணாக
என்னை கொன்று
புதைத்து விடு

இப்படிக்கு...............உன்னவன்

எழுதியவர் : நந்தி (2-Jul-11, 3:44 pm)
பார்வை : 605

மேலே