காதலித்ததால் கல்லறை வாங்கினேன்!

துடுப்புகள் விற்று
தோணி வாங்கினேன்!

கனவுகள் விற்று
கவிதை வாங்கினேன்

வார்த்தைகள் விற்று
மௌனம் வாங்கினேன்

செவிகளை விற்று
சங்கீதம் வாங்கினேன்

இதயம் விற்று
காதல் வாங்கினேன்

காதலித்ததால் இன்று
கல்லறை வாங்கினேன்!



எழுதியவர் : தா. அருள் ரோங்காலி (2-Jul-11, 5:11 pm)
சேர்த்தது : Arul Roncalli
பார்வை : 481

மேலே