மாலை பொழுது
சூழ்ந்திருக்கும் மலை
சில்லிட வைக்கும் சாரல்
காற்றுக்கேற்ப நடனமாடும் மரங்கள்
வானங்களை தாங்கியப்படி ஊர்ந்து செல்லும் மேகங்கள்
எங்கிருந்தோ மிதந்து வரும் பாடல்கள்
அத்தனைக்கும் மேலாய் நான் சாய்ந்து கொள்ள உன் தோள்கள்!
இதை விட வேறென்ன வேண்டும்
இந்த மாலை பொழுதை அழகாக்க!