என்னமோ தெரியல

என்னமோ தெரியல
ஒன்னநானும் விரும்பிட்டேன்
என்ன நீ மறந்ததால்
விஷத்தை நானும் குடிச்சிட்டேன்
உசுருக்கு போராடுறேன்
ஆஸ்பத்திரியில் நானும்தான்
ஏன் உசுரு நீதானடி
அது எப்படி போகும்தான் ( என்னமோ )

மனசுக்குள்ள ஒன்ன நானும்
மறச்சி இங்கு வச்சிருந்தேன்
வயசுப்புள்ள ஒன்ன எண்ணி
வாழ்க்கை வலை விரிச்சிருந்தேன்
ஒருவேளை நீயும் என்ன
சேராம போனாக்க..........
கருவேலங் காட்டுக்குள்ள
தூக்குபோட்டு தொங்கிடுவேன் (எனக்கே )

எனக்கே தெரியல
என்ன நீயும் நெனைச்சது
மருந்தை நீ குடிச்சதால
ஏம்மனசு தவிக்குது
உசுருக்கு போராடுற
ஆஸ்பத்திரியில் நீயும்தான்
ஒன்உசுரு நாந்தானய்யா
அது எப்படி போகும்தான்

அத்தைமகன் நீயிருக்க
அடுத்தவனை நெனச்சித்தில
ஆசைவச்சேன் ஒம்மேல
அதுக்கும் இப்போ வழியிம்மில்ல
ஊரும் உறவும் என்ன
ஒதுக்கியே வச்சாலும்
உன்கூட ஓடிவந்து ............
ஊரு மெச்ச வாழ்ந்திடுவேன் ( என்னமோ )

எழுதியவர் : இரா.மாயா (30-Oct-16, 4:34 pm)
Tanglish : ennamo theriyala
பார்வை : 87

மேலே