தில்லை தாண்டா நாங்க வாழும் பூமி
தில்லைத்தாண்ட ......
நாங்கவாழும் பூமி
பல தொல்லைகளை
நீக்கும் எங்க சாமி
வடம்பிடித்து இழுத்து
வரோம் தேரு
இது நடராசன் பெருமான்
வாழும் ஊரு
இதுக்கு சிதம்பரன்னு
இன்னும் ஒரு பேரு ( தில்லை )
நஞ்ச புஞ்சவெளைஞ்சிருக்கும்
நெற்பயிரு தலைகுனிஞ்சிருக்கும்
நெஞ்சமெல்லாம் ........
நெறஞ்சிருக்கும் பாரு
அதுக்கு கரணம் கொள்ளிட ஆறு
வீராணம் ஏறியிருக்கு
கடல் போல நீருஇருக்கு
சென்னைக்குதான் ..........
குடிநீர் பாரு .....எங்க
மன்னைக்குதான் .......
சிறப்பான பேரு ( தில்லை )
நாயன்மார்கள் பிறந்தஊரு
நந்தன் தந்த வரலாறு
ராமரும் சென்ற இடம் பாரு
பிச்சாவரம் காடுஇருக்கு
பக்கத்தில வாங்க கடலிருக்கு
உசுறுபோல விவசாயம் பாரு
உழைக்கும் எங்களுக்கு .....
தலைநகரம் கடலூரு ( தில்லை)