தனலட்சுமி

தனம் உன்னை
தினம் இரசிக்கும்
காதலன் நான் ....

தனம் தரும் தன லட்சுமியிடம்
நல்ல குணம் கண்டு வியந்தேன்
உன்னிடத்தில்...

மனம் முழுக்க தனம் நீ இருக்க
பணம் எதற்கு என் வாழ்வில் ....

தனம் தனம் தனம்
தினம் தினம் தினம்
உன்னை துதிப்பேன் நான் ...

தனம் நீ முகம் வாட கண்டால்
உலகை இரண்டாக்குவேன் ...

உன் சிரிப்பில்
சிதறும் சில்லரைகளை பொறுக்கி
வீண்மீன்களை விலைபேசுவேன் ....

தனம் நீ தலைகுனிந்து
போகையில்
ஆயிரம் பூக்கள்
பூக்குது
உன் அழகை காண ...

கம்பன் வீட்டு கட்டுதறி மட்டும் தான்
கவிபாடுமா...
உன் உடை காயும்
வெறும் கம்பியும் கவிபாடும்...

உன் உதடு மேல்
முளைத்த மச்ச அழகை காண
என் வாழ்வின் மிச்சநாட்கள் போதாதடி....

தன லட்சுமி என் வாழ்வில்
விளக்கேற்ற
நீ வருவாய் ....
என காத்திருக்கிறேன் ....

எழுதியவர் : கிரிஜா.தி (30-Oct-16, 5:42 pm)
பார்வை : 143

மேலே