நண்பர்கள் குழு
ஓரிரு நண்பர்களை
எப்போதோவது
எங்கேயாவது
பார்த்து பேசினாலே
பரவசம் கொள்ளும்
இதயம்... ஆனால்
தினமும் பேசிக்
கொள்ளும்... நட்பை
பகிர்ந்து கொள்ளும்
வாய்ப்புக்கு...குழுவின்
வாட்ஸப்புக்கு இன்று
இரண்டாம் ஆண்டு
நிறைவு நாள்...
மனங்கள் நிறைந்த நாள்...
கல்லூரிக் காலங்களில்
நெருங்கிய நண்பர்கள்
சிலராய் இருந்தனர்
நிறைய நண்பர்கள்
தெரிந்திருந்தாலும்...
அனைத்து நண்பர்களும்
இப்போது நெருக்கமாய்த்
தெரிகிறார்கள்
வாட்ஸப் இணைப்பில்...
நினைத்த வயதுக்குச்
சென்று தனியே
பேசிக்கொள்ளாமல்
நண்பர்களோடு
பேசிக் கொள்ளுதல்
இங்கு நிஜமாயிற்று...
வயதுகளின் கூடுதல்கள்
தரும் தளர்வுகளை விட
வாட்ஸப் குழு நண்பர்கள்
தரும் பலம் அதிகமென்பதால்
தளர்வுகள் தள்ளி
வைக்கப்படுகின்றன...
வாட்ஸ்அப் நிறுவனர்கள்
பிரியனும் ஜன் கோமும்
ஜிசிஇ வாட்ஸ்அப்
நிர்மாணி ஜெமோவும்
அனைத்து நண்பர்களும்
நன்றிக்கு உரியவர்கள்...
இந்தியாவில் தெரியும்
மஸ்கட் சூரியன்...
மஸ்கட்டில் தெரியும்
இந்தியச் சூரியன்...
இரண்டும் ஒன்றுதானே...
குழுவின் வாட்ஸப்பும்
அப்படியே அட்சரம்
பிறழாமல்...
நாடு கடந்து நட்பு
நினைத்த மாத்திரத்தில்
உத்திரவாதமாயிற்று...
நூலகங்களில்
ஒரு புத்தகம்
ஒருவரால்தான்
படிக்க முடிகிறது
செய்திகள் தகவல்கள்
அனைவராலும்
ஒரே நேரத்தில்
படிக்கப்படுதல் இங்கு
சாத்தியமாயிற்று...
ஆனந்த விகடன்களும்
கல்கண்டு குமுதங்களும்
தினத்தந்தி ஹிந்து
பேப்பர்களும் உடனுக்குடன்
படிக்க வேண்டிய அவசியம்
இல்லாமல் போயிற்று...
சக நண்பர்களின்
திறமையிலும்
அறிவிலும் அதிகப்பகுதி
அனைவருக்கும்
கிடைக்கலாயிற்று...
ஜிசிஇ'86 வாட்ஸ்அப்
குழுவிற்கு சொல்லும்
வாழ்த்துக்களில்
என்னை நானே
வாழ்த்திக் கொள்கிறேன்...
மூன்றாம் ஆண்டின்
நுழைவு வாயில்
இன்னும் நிறைய
நினைவு மலர்கள் தூவி
நம்மை அன்புடன்
வரவேற்கிறது...
அனைத்து நண்பர்களுக்கும்
இனிய நல் வாழ்த்துக்களுடன்
இரா.சுந்தரராஜன்.
(குறிப்பு: ஜிசிஇ'86---GCE '86 --- GOVERNMENT COLLEGE OF ENGINEERING TIRUNELVELI 1982 -86 BATCH)
👍😀👏🙏🌹🎂🌷🌺🙋🏻♂👌✍