வாழ்வை அர்த்தப்படுத்து
மனிதா !
உயர்வாய் சிந்தித்தால்
புத்தன்,காந்தியாகிறாய் !
எதிர்மறையாய்
சிந்தித்தால்
விலங்கினும்
தாழ்ந்து போகிறாய் !
சூழ்ச்சி நரியின்
குணமாயிருக்கலாம் !
பதுங்கிப் பாய்வது
புலியின் பண்பாயிருக்கலாம் !
மனிதன் மனிதனாக
வாழாவிடில் நம்
ஆறாவது அறிவு
அர்த்தமற்றதாகிவிடும் !
பொது நலனுக்காக
வாழ்வதென்பது
எல்லோருக்கும்
பொருந்தாத ஒன்று !
தன்னலமாய் வாழ்வதிலும்
தவறொன்றும் இல்லை !
உன் தன்னலத்தால்
பிறர் நலம் கெடாதவரை !
புத்தன்,காந்தியாய் அல்ல
வரையறைக்குள்
வாழ்ந்தால் போதும்
மனிதாபிமான மனிதனாய் !
உன் வாரிசுகளுக்கு
சரியான வழிகாட்டியாக
வாழ்ந்திடு போதும் !
சராசரி மனிதனே !
உன் பிறப்பும்
புனிதமாகும் ?
உன் வாழ்வும்
அர்த்தம் பெறும்........!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
